நீங்களும் நிகழ்ச்சிகள் படைக்க.....
ஸ்ருதிFM இன் நிகழ்ச்சிகள் இசையுடன் கலந்த தகவல் தொழில்நுட்பம் , இணையத்தளம், கலாசாரம், ஆன்மிகம், இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு போன்ற கருப்பொருட்களில் அமையவிருக்கின்றது.
தகவல் தொழில்நுட்பம்
நம் தலைமுறையினர் அதிகம் தேடும் தகவல் தொழில்நுட்பம் சம்பந்தமான நிகழ்ச்சிகள்.
இணையத்தளம்
இணையதள பாவனையாளர்களே நமது நிகழ்சிகளை கேட்பவர்கள் என்னும் முக்கிய காரணியை கருத்தில் கொண்டு இணையத்தில் உலாவரும் நேரத்தை வாழ்க்கைக்கு பயனுள்ளதாகிக் கொள்ளும் வகையிலான நிகழ்ச்சிகள்.
கலாசாரம்
உலகெங்கிலும் பரந்துவாழும் தமிழ்பேசும மக்களிடையே உருவாகியிருக்கும் கலாசார மாற்றங்கள் மற்றும் கலப்புகள் பற்றி கலந்துரையாடும் / விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள்
ஆன்மிகம்
தமிழ் பேசும் மக்கள் கடைபிடிக்கும் ஆன்மிகக் கோட்பாடுகள் சார்ந்த பாரம்பரியமும் புதிய சிந்தனைகளும் கொண்ட நிகழ்ச்சிகள்
இனங்களுக்கிடையிலான புரிந்துணர்வு
மொழியால் வேறுபட்ட மக்களுக்கிடையில் பல காரணங்களால் உருவான புரிந்துனர்வின்மைகளை யதார்த்தமாய் உணர்த்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
இவை தவிர சினிமா சாராத இசை மற்றும் தமிழ் படைப்புக்களை ஊகுவிக்கதக்க நிகழ்ச்சிகள் ஸ்ருதிFM நேயர்களை மகிழ்விக்க காத்திருக்கின்றது.
நாடு எதுவாக இருப்பினும் ரசனை அடிப்படையில் நீங்கள் ஒன்றுகூடும் ஒரு தளமாக ஸ்ருதிFM அமைய வேண்டும் என்பதே எமது அவா. எனவே மேற்கூறிய கட்டமைப்புகளுக்குள் நிகழ்ச்சிகள் உருவாகுவதற்கோ பிரதியாக்கம் செய்வதற்கோ அல்லது ஏதேனும் வழியில் ஸ்ருதிFM உடன் இணைந்து கொள்வதற்கோ வாசிக்கும் உங்களுக்கு எவ்வித தடையும் இல்லை..
நீங்கள் இணையத்தொடர்புடனும் நல்ல நிகழ்ச்சிகளை உருவாகும் ஆற்றல் பெற்றவராகயும் இருந்தால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்.. info@sruthifm.com
